AD

அஜித்தை அறிமுகப்படுத்தியதே நான்தான்- பிரபல பாடகர்!!

தற்பொழுது வெளியான விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் "தீரன் அதிகாரம் ஒன்று" படத்தை  இயக்கிய வினோத்துடன் கைகோர்த்துள்ளார். பாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பில் இப்படத்தின் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் டிரண்டானது. படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அஜித் முதன் முதலில் ஹீரோவாக நடித்தது தெலுங்கு படத்தில் தான். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்தியதே  நான் தான். எனக்கு அவரிடம் பிடித்த விஷயம்  பேட்டி கொடுப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவது, சமூக வலைதளங்களில் கருத்து சொல்வது என எதுவும் இருக்காது. நேற்று வரை கார், ரேசிங் என இருந்தார், இப்போது அதுவும் இல்லை. சினிமா, குடும்பம் என்று ஒரு வட்டத்துக்குள் வாழ்கிறார் என்று பேசியுள்ளார்.

#supersinger #ajithkumar #ajith #SPB