AD

விரைவில் வெளிவரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்!





உலக திரைப்பட ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. கடைசியாக வெளிவந்த, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் கிட்டத்தட்ட பல சூப்பர் ஹீரோக்களை வில்லன் தானோஸ் அழித்து விட்ட நிலையில் மீதமுள்ள சூப்பர் ஹீரோக்கள், வில்லன்களை எதிர்ப்பது மாதிரியான கதை. இப்படத்தை உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 


இந்நிலையில், புதிய சூப்பர் ஹீரோ படம் ஒன்று வெளியாகிறது. இப்படத்திற்கு ஷாஸோம் என பெயரிட்டுள்ளனர். "எல்லோருமே சூப்பர் ஹீரோக்கள்தான் அது உரிய நேரத்தில் வெளிப்படும்" என்பதுதான் இந்தப் படத்தின் கான்செப்ட். அனபெல்லா உள்ளிட்ட பல பேய் படங்களை இயக்கிய டேவிட் சான்ட்பெர்க் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். அக்வாமேன் படத்துக்கு ஆக்ஷன் காட்சிகளை அமைத்த குழு இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளது. 

மேக்சிம் அலெக்ஸ்சாண்ட்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். பெஞ்சமின் வால்பிளச் இசை அமைத்துள்ளார். ஸச்சிரி லீவி சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற ஏப்ரல் 5ந் தேதி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

#TamilCinemaKing #Cinema #Flim