துருக்கி செல்லும் விஷால்-தமன்னா
விஷால் - தமன்னா ஜோடி மீண்டும் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள்.
விஷால் நடித்து வரும் அயோக்யா பட வேலைகள் முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடைபெறுகிறது.
துருக்கியில் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்த பின்னர் இந்தியா திரும்புகிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.
#Tamannaah,#Vishal, #yuvan_shankar_raja, #tamilcinemaking
Post a Comment