AD

என்ஜிகேக்கு வந்த சோதனை

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த என்ஜிகே, படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தாமதமாகிவிட்டது.

சூர்யா நடித்துள்ள  இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் தன் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகளில் சூர்யா தீவிரமானார். கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், மே 31 ஆம் திகதி, என்ஜிகே படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



#NGK, #Yuvan_Shankar_Raja, #SRPrabhu, #Selvaraghavan, #Sai_Pallavi, #Rakul_Preet_Singh, #tamilcinemaking