AD

கைதாகும் நடிகை ஓவியா!!

#Oviya #90ML #Oviya Areested

நடிகை ஓவியா நடித்து  கடந்த வெள்ளியன்று வெளியான '90ML' திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையே சீரழித்துவிட்டதாக கலாச்சார காப்பாளர்கள் தங்களுடைய கருத்துக்களை ஆவேசமாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.