AD

தளபதி 63 நயன்தாராவின் தந்தை யார் தெரியுமா?


தற்போது தளபதி ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருப்பது தளபதி 63 படத்தின் செய்திகளுக்காக தான். தளபதி 63 படத்தில் தளபதியுடன் இணைந்து, நயன்தாரா, ஜாக்கி சுரூப், யோகிபாபு, விவேக், கதிர் என நடித்து வருகிறார்கள். தளபதி 63 படத்தில் தற்போது பேராசிரியர் ஞானசமந்தமும் இணைந்துள்ளார்.

இவர் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை தற்போது வெளியிட்டுள்ளார். இவர் நயன்தாராவிற்கு தந்தையாக நடித்துள்ளாராம். மேலும், இந்த விஷயத்தை சமீபத்திய கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார்.


இந்த விஷயத்தை கேட்டதும் அந்த கல்லூரி மாணவர்கள் ஆரவாரத்துடன் கை தட்டி மகிழ்ந்தனர். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.