AD

தல 59 படத்தின் அட்டகாசமான டைட்டில்!!

தல அஜித் நடிக்கும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியாகவிருப்பதாக அஜித்தின் பி.ஆர்.ஓ தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இதன்படி சற்றுமுன்  இன்று இரவு 9.30 மணிக்கு சிவராத்திரியை முன்னிட்டு 'தல 59' படத்தின் டைட்டில் 'நேர் கொண்ட பார்வை' என்று அறிவிக்கப்பட்டு அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில நொடிகளில் டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்றுவிட்டது என்பதை சொல்லவும் வேண்டுமா!!

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அஜித் வழக்கறிஞர் கெட்டப்பிலும் மூன்று நாயகிகள் குற்றவாளி கூண்டில் இருப்பது போன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Ajith #Shraddha Srinath #Thala 59 #