AD

சூர்யாவின் NGK டீசர் ஸ்பெஷல் அப்டேட்.!


சூர்யாவின் ரசிகர்கள் தற்போது சூர்யா நடித்த NGK படத்தின் டீஸருக்காக தான் காத்திருக்கிறார்கள். டீஸர் வரும் 14 ஆம் தேதி காதலர்கள் தினத்தை முன்னிட்டு வெளியாக போகிறது. இந்த படத்தை பொறுத்த வரை அரசியல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்  சிங் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் டீஸர் வெளியிடும் தேதி மட்டும் தான் அனைவரும் அறிந்திருந்தார்கள் ஆனால் தற்போது படத்தின் டீஸர் வெளியாகும் நேரமும் தெரியவந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் படத்தின் டீஸர் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா காப்பான் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவருடன் ஆர்யா, சாயீஷா, மோகன்லால் மற்றும் சமுத்திரக்கனி என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக சூர்யா மற்றும் கே.வி. ஆனந்த் இணைகிறார்கள். இப்படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஆஜெஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.