AD

வர்மா படத்தின் கதாநாயகியாக இணைந்துள்ள ஜான்வி கபூர்!

சி

சில நாட்கள் முன்பு தான் துருவ் நடித்த வர்மா திரைப்படத்தை மீண்டும் முதலில் இருந்து படமாக்க போவதாக கூறினார்கள் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம். மேலும், படத்தில் கதாநாயகனை தவிர மற்ற எல்லோரையும் மாற்ற போவதாகவும் கூறினார்கள். இந்த சம்பவம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சிக்கு தள்ளியது. காரணம் இது வரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்பதால் தான்.

இந்த நிலையில், பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் புதிய படப்பிடிப்பில் கதாநாயகியாக களமிறங்குகிறாராம். தமிழில் ஜான்விக்கு இது தான் முதல் படமும் கூட. இவர் கடந்த வருடம் தான் பாலிவுட்டில் தடக் என்றபடம் மூலம் அறிமுகமானார். அந்த படமும் மராத்தி படத்தின் ரீமேக் தான்.

தற்போது தமிழில் இவர் அறிமுகமாகும் படமும் ரீமேக் படம் தான். ஆனால் இந்த படம் தெலுங்கு ரீமேக் ஆகும். தெலுங்கில் படம் சூப்பர் ஹிட் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். மேலும், ஜான்வி இந்த படத்தில் நடிப்பது என்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.