AD

சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது!

விளையாட்டுகளில் எல்லாரையும் கவர்ந்த விளையாட்டுகளில் ஒன்றுதான் கிரிக்கெட்.  அதில் விளையாடும்  வீரர்களான  சச்சின், தோனி, மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீராங்கனை "சாய்னா நேவால்", துப்பாக்கிச் சுடும் வீரர் "அபினவ் பிந்த்ரா" மகளிர் கிரிக்கெட் வீராங்கனை "மிதாலி ராஜின் பயோ பிக்" திரைப்படங்களும் உருவாகி வருகிறது. இந்நிலையில், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய டென்னிஸ் வீராங்கனை "சானியா மிர்ஸாவின்" வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளர்கள்.

இது குறித்த அறிவிப்பை சானியா மிர்ஸா பேட்டி ஒன்றில் அவரே வெளியிட்டுள்ளார். ‘சானியா மிர்ஸா’ பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது. தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது என்னுடைய கதை,  இதில் எனது பங்கு அதிகம் உள்ளது என சானியா அதில் தெரிவித்துள்ளார்.


இந்த படத்தை "ரோனி ஸ்குருவாலா" உருவாக்கவுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் சானியா ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.