நடிகர் சூர்யாவுடன் இணையும் சாய்பல்லவி!!

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகம் என ஐந்து மாநிலங்களில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தின் டீசர் வெளியீட்டை ஒரு திருவிழா போல் கொண்டாட முடிவு செய்துள்ளனர். மேலும் இலங்கையில் இந்த படத்தின் டீசரை குறிப்பிட்ட சில திரையரங்குகளில் பிப்ரவரி 14ஆம் தேதியே திரையிடவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவுடன், ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment