AD

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!!

"புலிக்கு பிறந்தது பூனை" ஆகுமா என்ற மாதிரி தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டு படிப்பு மற்றும் குறும்படத்தில் நடிப்பது, பிரபலங்களை பேட்டி எடுப்பது என தந்தை விட  பிசியாக இருக்கிறார்.   இன்னொரு பக்கம் விஜய்யின் மகளும் தற்போது தந்தைக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் வகையில் தன்னுடைய  பங்கு சாதித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் விஜய்யின் மகள் சாஷா, அந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவில் ஒரு வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பள்ளியே  பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மகள் பங்குபெற்ற பேட்மிண்டன் குழு, சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.


பேட்மிண்டன் விளையாட்டில் சாஷா மிகுந்த ஆர்வமுள்ளவர்.  அவருடைய விளையாட்டை சமீபத்தில் விஜய் நேரில் ரசித்த பார்த்த  புகைப்படங்கள் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.