AD

உலகி அழகியை கலங்க விட்ட நெட்டிஸன்கள்!!

அகில உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் 43 வயதாகிறது.  இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.  தற்போது  இரண்டு குழந்தைக்கு தாய் ஆகியிருக்கிறார். அதாவது, இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதற்கிடையில் அவர் காதலித்து வரும் மாடலிங் துறையிலிருக்கும் கட்டுமஸ்தான பாய்பிரண்ட் ரோமேன் ஷாவல் உடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

 எங்கு சென்றாலும் பாய்பிரண்டுடன்  ஜோடியாக சுற்றி திரியும் சுஷ்மிதா நேற்று ஒரு தகவலை  தன்னுடைய இணைய தள பக்கங்களில்  பகிர்ந்தார். ‘திருமண சடங்கை யார் கண்டுபிடித்தார்களோ அவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்’ என தெரிவித்திருந்தார். அவரது இந்த கமென்ட்டுக்கு நெட்டிஸன்கள், வரவேற்புக்கு பதில்  சுஷ்மிதாவை  வசைமழை பொழிந்து  தெறிக்கவிட்டனர்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சுஷ்மிதா அதைக் கண்டு வெலவெலத்துப்போனரர், உடனடியாக திருமணம் பற்றிய தனது பதிவை ஜோக்காக எடுத்துக்கொண்டு சிரித்து மகிழுங்கள் என பதிவிட்டு நெட்டிஸன்களை சமாதானப்படுத்தினார். சுஷ்மிதா சென், ரட்சகன் படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடித்ததுடன்,  ‘முதல்வன்’ படத்தில், ‘ஷக்க லக்க பேபி ஷக்க லக்க பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.