AD

ஸ்ருதி ஹாசனுக்கு காதலன் கொடுத்த பிறந்த நாள் பரிசு!!









நடிகர் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்து ஒன்றரை வருடம் கடந்தபோதிலும் புதிய படங்களின் நடிக்காமல்  ஒதுங்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.  ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் தன்னை மறக்காமல் இருக்க வைத்திருப்பது என்ற வித்தையை கற்றுவைத்திருக்கிறார்.  இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் அவர் அடிக்கடி லண்டன் பறந்து காதலன் மைக்கேல் கோர்சேலை சந்திப்பதுடன், அவருடன் டேட்டிங்கில் ஈடுபடுகிறார். மேலும், பாப் பாடகியாக மாறி அவ்வப்போது மேமடைகளில் தோன்றி ஆங்கில பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார்.

ஸ்ருதி இம்முறை தனது பிறந்த நாளின்போது மைக்கேல் கோர்சேலையுடன் போதிய நேரம் செலவிட முடியாத வகையில் பிஸியாக இருந்தார். இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்ட மைக்கேல்,’இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டார்லிங்,  இப்படியொரு தோழி எனக்கு கிடைத்திருப்பது ஆசிர்வதிக்கப்பட்டதாகம் , எனக்கு கிடைத்த சிறப்பான வரமாக  எண்ணுகிறேன். ஐ லவ் யூ. இந்த நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும்’ என வாழ்த்தியிருந்தார். காதலனின் வாழ்த்து செய்தியை பார்த்ததும்  அவர் மீது காதல் ஏக்கமானார்.
ஸ்ருதி காதலனுக்கு அளித்த  பதிலில், ‘மைக்கேல் உன்னை பிரிந்திருப்பதை நான் மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன்.  உடனடியாக என்னை கட்டித் தழுவு’ என காதல் வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.