AD

நடிகை தமன்னாவிற்கு இப்படி ஒரு ஆசையா?

நடிகை தமன்னா தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்,  பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவர் தேவி 2 வில் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தான்  நடிக்க விரும்பும் நடிகர் குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். முதன் முறையாக சின்னத்திரையில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரை வரைக்கும் வந்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு இவரும் வாங்குகிறார்.

இவர் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா உட்பட பல முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாக நடிகை தமன்னா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.