AD

நடிகை காஜல் அகர்வாலுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது!!


பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிப்புடன் தற்போது சொந்தமாக படத்தை தயாரிக்கும் தொழிலிலும் இறங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது இவர் சொந்தமாக பட தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு ‘கா மூவீஸ்’ என பெயரிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் காஜல் அகர்வாலே நாயகியாக நடிக்க உள்ளார். தெலுங்கு இயக்குனரான பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார்.

அவர் தயாரிக்கும் முதல் படத்திலே தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இந்த படம் உருவாக உள்ளது. கடந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த ‘ஆவ்’ படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. அந்தப் படத்தின் நாயகியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால்.