AD

தமிழுக்கு வரும் பிரபல மலையாள நடிகை!!

இயக்குனர் சீமான், ஆர்.கே.சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் படம், அமீரா. சீமான் உதவியாளர் இரா.சுப்பிரமணியன் இயக்குகிறார். "டுலெட்" இயக்குனர் செழியன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். அமீரா பேகம் என்ற பெண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளை சொல்லும் கதை இது. அமீரா என்றால், "இளவரசி" என்று அர்த்தம். இந்த வேடத்தில் நடிப்பதன் மூலம், மலையாள நடிகை அனு சித்தாரா தமிழுக்கு வருகிறார்.

#Anusithara #Seeman #R.K.Suresh  #M.S.Bhaskar #Ameera #Newmovie #Tamilcinemaking