AD

அம்மா வேடத்தில் நடிக்கும் ரஜினி பட நாயகி!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா, அஜித் நடித்த "சிட்டிசன்" உள்பட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை நக்மா. கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நடிகர்கள் சரத்குமார், கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, பிரபு, பாக்யராஜ், என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகிய நக்மா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் மீண்டும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நக்மா நடித்து வருவதாகவும், அதில் ஒரு படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அம்மாவாக நடித்து வருவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் நக்மா தெரிவித்துள்ளார்.

#Rajinikanth #Ajith #Sathiyaraj #Prabudeva #Jothika #Nagma  #Indian #Politician #Tamilcinemaking