AD

ஓவியாவை அழைக்கும் பிரபல அரசியல் கட்சி!!

தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி விவகாரங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொருபக்கம் தங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்த பிரபல நடிகர், நடிகைகளை இழுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் நடிகை ஓவியாவையும் ஒரு பிரபல கட்சி அழைத்துள்ளது. அதற்கு அவர் அளித்துள்ள பதில்:

என்னை பிரபல கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் நேரில் சந்தித்து தங்கள் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்கள். மறுத்துவிட்டேன். என்னை கட்சியில் சேர அழைத்தது யார் என்பதை சொல்லவிரும்பவில்லை. கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு செல்வீர்களா என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன். கோலிவுட்டில் நடிகையாக நல்லதொரு இடத்தை பிடிக்கவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஓவியா கூறினார்.

#Ooviya  #90ML #Newmovie #Political #Latestnews #Tamilcinemaking