AD

இயக்குனர் பாலாவிற்கு வந்த சிக்கல் - திரை உலகத்தில் பரபரப்பு!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் "வர்மா", இந்த படத்தில்தான் துருவ் முதல் முதலாக அறிமுகம் ஆகிறார். இந்த படம்  2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான "அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்" ஆகும்.  தெலுங்கில் விஜய் தேவேரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகவும் பேசப்பட்டது. ஆகவே இந்த படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் இயக்குனர் பாலா.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கி திருவண்ணாமலை, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் படபிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் , "திரைப்படம் கைவிட படுவதாக படத்தை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்ததுள்ளது. மேலும் அர்ஜுன் ரெட்டியின் படத்திற்க்கும், இயக்குனர் பாலா எடுக்கும் படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் இந்த படத்தை நாங்கள் நிறுத்தி உள்ளோம்.
மேலும் புதிய டீம் உடன் அர்ஜுன் ரெட்டியின் படம் மீண்டும் தமிழில் எடுக்க படும் என்று தெரிவித்துள்ளார்கள்.புதிய டீம்மில் நடிகர் விக்கிரமின் மகன் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் முக்கியமான இயக்குனராக கருதப்படும் பாலா எடுத்த திரைப்படம் கைவிடபட்டதால் திரை உலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.