AD

நடிகை காஜல் அகர்வாலை கோபப்படுத்திய சம்பவம்!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை காஜலை பார்த்தால் சாதுவாக தெரிகிறார். ஆனால் நிஜத்தில் கோபம் வந்தால் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாதாம். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-

‘நான் ஹீரோயினாகி நடிக்க வந்து முழுதாக 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். மார்க்கெட் போய் சும்மா உட்கார்ந்து விடுவோமோ என்று நான் ஒரு நாளும் நான் பயந்ததே இல்லை. அடுத்தடுத்து பட  வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
நான் தைரியமான பெண், என்னை எப்படி பாதுகாப்பது என்று நன்றாக  தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது என்றுதான் நான் கூறுவேன். இது வரைக்கும்  என்னை அப்படி யாரும்  அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் "மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்" என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.