AD

நடிகை சிம்ரனின் ஆசை நிறைவேறியது!!

நடிகை சிம்ரனின் தோழியாக "ஜோடி" படத்தில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. இவர் 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி  படத்தில் நடிகை திரிஷா நடித்தது மிகவும் சிறிய  வேடம். ஆனால் அதன் பின் கதாநாயகியாக அறிமுகமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகியாக திகழ்ந்து  வருகிறார்.

திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை  சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். அதன் பிறகு கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டாருக்கு  ஜோடியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.

‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறை இவருக்கு இருந்து வந்ததாம், தனது அடுத்த படத்தில் இந்த குறையை  தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்‌‌ஷன் நிறைந்து  படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.