AD

நடிகைகள் நயன்தாரா, தமன்னாவுடன் இணையும் நடிகை அனுஷ்கா!!

நடிகை அனுஷ்கா பாகமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் ஒன்றும் நடிக்க  ஒப்புக் கொள்ளாமல், தன்னுடை  உடல் மெலிவதற்கான சிகிச்சையில் கவனம் செலுத்தி வந்தார்.  சுமார் 1 வருட காலம் தீவிரமாக முயன்றதுடன் இல்லாமல்,  வெளிநாடும்  சென்று சிகிச்சை பெற்று தன்  உடல் எடையை குறைத்துள்ளார்.

அதன்பிறகு அவர் ஐதராபாத் திரும்பினார். அவரது புதிய தோற்றத்தை கண்டவர்கள், முன்பிருந்ததைவிட தற்போது ஓரளவுக்கு உடல் மெலிந்திருக்கிறார் என்கிறார்கள். நடிகை அனுஷ்கா தன்னை பற்றி வரும் வதந்திகளையும், திருமண கிசுகிசுகளையும்,  கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து கொண்டு அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.

சிரஞ்சீவி தற்போது தெலுங்கில் "சே ரா நரசிம்மரெட்டி" படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படம்  உண்மை சம்பவத்தின் பின்னணியை  கொண்டதாகும்,  இப்படத்தில் "அமிதாப்பச்சன்", "நயன்தாரா", "தமன்னா" நடிக்கின்றனர். இதற்கிடையில் மற்றொரு சர்ப்ரைஸ்  கேரக்டர் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனையும் இயக்குனரிடம் உள்ளதாம் அதில் அனுஷ்காவை நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


ஏற்கனவே விஜயகாந்த் நடித்த ரமணா தமிழ் படம் தெலுங்கில் ஸ்டாலின் பெயரில் ரீமேக் ஆனபோது சிரஞ்சீவி நடித்திருந்தார். ஆனால் அப்படத்தில் அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் மற்றும் நடித்தார். கதாநாயகியாக  நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. "சே ரா" படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு  இருப்பதாக பட தரப்பு கூறுகிறது.