நடிகை ஓவியாவின் புதிய படத்திற்கு A சான்றிதழ்!!
இந்த நிலையில் நடிகை ஓவியா நடிப்பில் உருவாகி வரும் '90ml' படத்தை இயக்கி வரும் இயக்குனர் அனிதா உதீப் இந்த படம் குறித்து கூறியபோது, 'இந்த படம் பெண்கள் ஒரு கட்டமைப்பில் வாழாமல் அதை உடைத்து காதல், திருமணம் உள்பட முக்கிய முடிவுகளை சொந்தமாக எடுக்கும் துணிச்சல் மிகுந்த பெண்களை குறித்த படம்.

இந்த கேரக்டரில்தான் ஓவியா நடித்துள்ளார். அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் ஓவியாவும், அவருடைய மிடில் கிளாஸ் தோழிகளும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ஆகும். இந்த காட்சிகளில் சில இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு என்று கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் கடந்த ஆண்டு வெளியான சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஓவியாவும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment