AD

நடிகர் விஷாலின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி!!

நடிகர் விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளது.  இந்த படம் வரும் ஏப்ரலில் திரையிட முடிவு செய்து உள்ளார்கள்.

விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கட்மோகன் இயக்கி வருகிறார். சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். கார்த்திக் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில், மூர்த்தி கலை இயக்கத்தில், ராம்-லட்சுமண் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.