AD

நடிகர் விஜய்யின் 'தளபதி 63' படத்தின் புதிய தகவல்!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பை 180 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளார்கள், அதனால  இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையுடன் நிறைவடையும் என தெரிகிறது.

நடிகர் விஜய், நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் பரியேறும் பெருமாள் கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன்  ஏ.ஆர் .ரஹ்மான் இந்த படத்திற்கு  இசையமைகிறார். விஷ்ணு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.