AD

நடிகை திரிஷாவின் அடுத்த திரைப்படம்!!

நடிகை திரிஷா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியன் 96 என்னும் திரை படம் மிக பெரிய அளவில் இவருக்கு புகழ் சேர்த்து தந்தது. நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் திரிஷாவின் சொந்த பேரை மறந்து "ஜானு" என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு ஜானு கேரக்டரை த்ரிஷா அனைவர் மனதிலும் பதியவிட்டுள்ளார்.

நடிகை திரிஷாவின் அடுத்த படத்தை 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் நடிகை திரிஷா ஏற்கனேவே நடித்து கொண்டிருக்கும் "1818", "பரமபத விளையாட்டு", "சதுரங்க வேட்டை 2"ஆகிய படங்கள் முடியும் நிலையில் உள்ளது.  இதில் "சதுரங்க வேட்டை 2"விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.