AD

இளையராஜா மீது மேடையில் குற்றம் சாட்டிய ரஜினி!

தமிழ் சினிமாவில் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். இவரது 75 -வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தமிழ் சினிமா தயாரிப்பு சங்கம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் மக்கள் மட்டும் இல்லாமல் பல பிரபலங்களும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ரஜினி, பேசும்போது தன்னை விட காமலிற்கு தான் இளையராஜா நன்றாக இசையமைப்பதாக கூறினார். அதற்கு இளையராஜா இதை தான் கமலும் கூறுகிறார், நீங்கள் ரஜினிக்கு மட்டும் நன்றாக இசையமைத்து கொடுக்குறீர்கள் என்று, ஆனால் நான் இருவரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று தான் இவ்வாறு இசையமைக்கிறேன் என்று கூறினார்.

அதை கேட்ட மக்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். மேலும் எ. ஆர். ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுடன் 33 வருடங்களுக்கு முன்பு எடுத்த ஒரு புகைப்படத்தையும் தற்போது மேடையில் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை ஒரு ட்வீட்டாக போட்டார். மேலும் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள்.