AD

தல ரசிகர்கள் இப்படியும் கொண்டாடுகிறார்களா? 25 கிலோ கேக் எதற்கு தெரியுமா?


இன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியாகி 25 நாள் என்பதால் படத்திப் 25 நாள் வெற்றியை இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் 25 நாள் பேட்ட படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடுவதற்காக படத்தின் இயக்குனர் நேற்று ஒரு டப்பிங் வீடியோவை வெளிட்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைபோல் தல ரசிகர்கள் நேற்று அவர்களது கொண்டாட்டத்தை இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி ஆரம்பித்தனர். இன்று சென்னை திரையரங்கு ஒன்றில் 25 கிலோ கேக் வெட்டி விஸ்வாசம் 25 நாட்கள் கொண்டாட்டத்தை ரோபோ ஷங்கர் உற்பட பல தல ரசிகர்களும் இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.

ரோபோ சங்கர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது இந்த வெற்றி என்னை மிகவும் மகிழ்விக்கிறது. இந்த ஆண்டு தொடக்கமே இவ்வளவு வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.