AD

விஜய் 63-யில் தளபதியின் பெயர் என்ன தெரியுமா? கசிந்த தகவல்!

தளபதி 63 படத்தின் அப்டேட் குறித்து அறிய அனைத்து விஜய் ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தவரிக்க முடியாத முன்னணி நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும். இந்த படத்தின் கதாநாயகி நயன்தாரா என்பது அனைவர்க்கும் தெரியும். படத்தில் தளபதி விளையாட்டு வீரர் என்பதால் இளைமையாக தெரியவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தளபதியின் புருவம் வித்யாசமாக இருந்தது. இந்த படத்திற்காக தான் எப்படி ஒரு ஸ்டைல் என்றும் கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பை சென்னையில் தான் நடத்தி வந்தனர். தளபதியை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் திரள்வதால் படப்பிடிப்பை தற்போது ஆந்திராவிற்கு மாற்றியுள்ளார்கள்.

மேலும், இந்த படத்தில் தளபதியின் பெயர் மைகேல் என்றும் தெரியவந்துள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரசிகர்களால் பகிரப்பட்டு தான் வருகிறது. அதைத்தொடர்ந்து தளபதி இந்த படத்தில் வடசென்னை வாலிபனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.