AD

தல ரசிகர்கள் செய்யும் அற்புத செயல்!



தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையிடப்பட்டு திரையரங்குகளில் ஒளிபரப்பாகிவருகிறது. இத்திரைப்படம் குடும்ப சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளதால் ரசிகர்கள் 24 நாட்களாகியும் திரைப்படத்தை திரையரங்கியில் கண்டு ரசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஸ்வாசம் 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடுவதால், தல ரசிகர்கள் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்த இருக்கிறார்கள். இந்த முகாமை தல ரசிகர்களும், அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து, சங்கரன்கோவில் மக்களுக்காக நடத்துகிறார்கள்.

இந்த முகாம் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்க இருக்கிறதாம். இந்த தகவலை தல ரசிகர்கள் திருநெல்வேலி பகுதி மக்களுக்கு பகிருமாறு கேட்டுவருகின்றனர். இவ்வாறு நல்ல விஷயங்களை தல ரசிகர்கள் செய்து வருவதால் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.