AD

பிக் பாஸ் சீசன் 3-யின் தொகுப்பாளர் இவர் தான்!


டிவி நிகழ்ச்சிகளில் மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் தோன்றும் பிரபலங்களுக்கு மிகுந்த வரவேற்பும் புகழும் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 ஜூன் மாதம் தொடங்குமாம். தமிழை போல் பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு தான் வருகிறது. தற்போது சீசன் 3 பற்றிய பேச்சுகள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டன.

தமிழில் இரு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அடுத்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. தமிழ் போலவே தெலுங்கிலும் ஒரே வருடத்தில் தான் சீசன் 1 தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நடிகர் ஜூனியர் என் டி ஆர் இதை தொகுத்து வழங்க TRP அதிகமாக கிடைத்தது. பின் சீசன் 2 வில் அவருக்கு பதிலாக நானி தொகுத்து வழங்கினார். இவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது, ஆனால் சீசன் 1 போல வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பிக் பாஸ் அடுத்த சீசனிற்கு ஜூனியர் என்.டி.ஆரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் RRR என்ற படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இந்த நிலையில், இவர் பிக் பாஸ் சீசன் 3-யை தொகுத்து வழங்கினால் ரூ 20 கோடி சம்பளம் வழங்கவும் அந்நிறுவனம் தயாராக இருக்கிறதாம். அவர் சீசன் 1 ல் வாங்கியதை காட்டிலும் பல மடங்கு சம்பளமாம்.