AD

நானும், த்ரிஷாவும் எப்பொழுதுமே காதலித்தது இல்லை - ஸ்ரீரெட்டி வெளியிட்ட புகைப்படம்


பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது சென்ற வருடம் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் புகார்களை கூறியவர் ஸ்ரீரெட்டி.

அதன் பிறகு அவர் ராகவா லாரன்ஸ் உட்பட சில தமிழ் சினிமாத்துறை நட்சத்திரங்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தார். அதன் பின் லாரன்ஸ் அவருக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டவர் ஸ்ரீ ரெட்டி. அதிலும் குறிப்பாக நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் மேலும் ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. ஒரு புகைப்படத்தில் ராணா த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் அபிராம் ஸ்ரீரெட்டிக்கு 
உதட்டில் முத்தம் கொடுக்கிறார். ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு தன் மகன்களை ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை. 
ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித் தான். தாத்தா போன்று பேரன்கள். இந்த லீலைகள் எல்லாம் ராமநாயுடு ஸ்டுடியோஸில் தான் நடக்கின்றன என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

நானும், த்ரிஷாவும் எப்பொழுதுமே காதலித்தது இல்லை என்று ராணா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.