AD

திருமணத்திற்கு தயாராகும் சாயீஷாவிற்கு இப்படி ஒரு வாய்ப்பா?


தமிழ் சினிமாவில் சில படங்கள் மூலமாகவே முன்னணி நடிகையானவர் தான் சாயீஷா. இவர் தமிழில், கடைக்குட்டி சிங்கம், வனமகன், ஜூங்கா, கஜினிகாந்த் போன்ற சில ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவரின் நடனம் பலராலும் பாராட்டத்தக்கவை. மேலும் இவர் நடிகர் ஆர்யாவை காதலித்து வருதாகவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவுகிறது.

இவர் இதற்கு முன்பே தெலுங்கிலும், ஹிந்தியிலும் படம் நடித்துவிட்டார். இந்த நிலையில், தற்போது கன்னடத்திலும் நடிக்கவிருக்கிறார். இவர் கன்னடத்தில் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை சந்தோஷ் ஆனந்ராம் இயக்குகிறார் என்றும், Hombale Films தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட்டும் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சாயீஷா தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற நடத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கன்னட படங்களில் நடிப்பதற்கு தயாராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.