AD

நடிகை ஸ்ரீதேவியிற்காக தல அஜித் இதை செய்வாரா?


தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் தான் தல அஜித். இவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் பெரிதாக விளம்பரத்தை தேடும் மற்ற நடிகர்களை போல் அஜித் இல்லை என்பது தான் உண்மை. இவர் எந்த ஒரு விழாவிலும் அவ்வளவு எளிதில் பங்குகொள்ள மாட்டார். இவருக்கு எப்போதும் சினிமா ஒரு தொழில் மட்டும் தான். தன்னோட புகழை வைத்து எந்த இடத்திலும் நடந்துகொள்ள மாட்டார். ரசிகர்களின் அன்பை தவறாக பயன்படுத்த மாட்டார்.

இறுதியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியானது விஸ்வாசம். இந்த படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் முக்கிய சம்பவம் என்று கூட சொல்லலாம். இந்த படத்தில் தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் பாலிவுட் பிங்க் படத்தின் ரீமேக் என்பதும் அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இந்த படத்தில் பூஜையை பிப்ரவரி 24 ஆம் தேதி நடத்த போனி கபூர் முடிவெடுத்துள்ளாராம்.

இந்த நாள்ளை தேர்வு செய்ய காரணம், ஸ்ரீதேவி இறந்த நாள் என்பது தானாம். ஸ்ரீ தேவி கடந்த ஆண்டு இதே பிப்ரவரி 24 ஆம் தேதி தான் உயிரிழந்துள்ளார். இந்த நாளில் அஜித்தின் 59 படத்தின் பூஜையை தொடங்க போனி கபூர் முடிவெத்துள்ளார். இந்த பூஜையில் தல அஜித் கலந்துகொள்வாரா என்று தெரியவில்லை. ஏனெனில் அஜித் இந்த மாதிரியான விழாவிற்கெல்லாம் செல்வதில்லை அதனால் ஸ்ரீ தேவியிற்காக வருவாரா என்றும் தெரியவில்லை.