AD

நயன்தாராவின் வைரல் வீடியோ! ரசிகருக்கு நயன்தாரா கொடுத்த மரியாதை!


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் முக்கிய நடிகை தான் நயன்தாரா. பல வருடங்களாக முக்கிய நாயகியாக உள்ள நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா.

அவரது கடின உழைப்பால் தான் இந்த இடத்தில் இருக்கிறார். மேலும் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முக்கிய நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் விமான நிலையத்திற்கு சென்ற நயன்தாராவிடம் ஒரு ரசிகர் செல்ஃபீ எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்க்கு ஒரு நொடி கூட யோசிக்காத நயன்தாரா அவரிடம் நின்று போட்டோ எடுத்துவிட்டு நடந்து செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எந்த உயரத்திற்கு சென்றாலும் வந்த பாதையை மறக்காத நடிகையாய் இருக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்து வருகிறது.