AD

சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்திற்கு சென்ற பிரபலங்களின் லிஸ்ட்!


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தான் ரஜினிகாந்த், இன்று அவரது இளைய மகளின் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சௌந்தர்யாவின் இந்த திருமண முடிவு நன்மையில் முடிய பல கோவில்களுக்கு சென்று பிராத்தனையும் செய்து வந்தார்கள். திருமணத்திற்கு முன்பே சௌந்தர்யா அவரது வாழ்வின் முக்கிய ஆண்கள் தன் தந்தை, மகன் மற்றும் கணவர் விசாகன் தான் என்றும் கூறினார்.

அதன் படி சௌந்தர்யா திருமணத்தின் முடிவை நன்கு சிந்தித்து தான் எடுத்துள்ளார் என்பது உறுதியாகிறது. பல ரசிகர்களும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று சௌந்தர்யாவின் திருமணம் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் நடந்து முடிந்தது.

மேலும், இவர்களின் திருமண நிகழ்விற்கு உலகநாயகன் கமல் ஹாசன், கலைப்புலி தாணு, எ.வி.எம். சரவணன், எஸ்.பி. முத்துராம், நடிகை ஆண்ட்ரியா, தயாநிதி அழகிரி, டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், நடிகை மஞ்சிமா மோகன், கஸ்துரிராஜா, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், இயக்குனர் பி. வாசு, நடிகை அதிதி ராவ், இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம்பிரபு, நடிகை மீனா, ராம்குமார், இயக்குனர் செல்வராகவன், வைரமுத்து, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், அவரது மனைவி, ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீ தேவி விஜயகுமார், மலையாள ஸ்டார்ஸ் மோகன் பாபு மற்றும் லட்சுமி மஞ்சு என பல பிரபலங்களும் வந்து வாழ்த்துக்கூறியுள்ளார்கள்.