AD

சூப்பர்ஸ்டாருடன் இணையும் தளபதியின் ஒளிப்பதிவாளர்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.  இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப் கலைஞர்களின் தேடுதல் வேட்டை மும்முரமாக நடைபெற்று கொண்டிருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு "சந்தோஷ் சிவன்" ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த தகவலை சந்தோஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் சிவன் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' மற்றும் தளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பல தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.