AD

சூர்யாவின் காப்பானில் இணையும் ஆர்யா - சாயிஷா!!!



நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் படம் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இன்நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அந்த படத்தின் பெயர்  'காப்பான்' ஆகும். இந்த நிலையில் பிரதமரின் காப்பாளர் மற்றும் தேசிய பற்று மிகுந்த சூர்யாவின் கேரக்டர் அமைந்துள்ள இந்த படம் படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஒருவேளை இந்த தேதிக்குள் பணிகள் முடிவடையவில்லை என்றால் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர்கள்  சூர்யா, மோகன்லால், ஆர்யா, மற்றும் சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.