AD

காதலர் தினத்தில் மோதும் சூரியா - கார்த்தி!!

நடிகர் கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இன்று முதலே ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது.

 இந்த நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் கார்த்திக்கு இந்த படம் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'தேவ்' ரிலீஸ் ஆகும் அதே 14ஆம் தேதி சூர்யாவின் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. இந்த டீசரை வரவேற்க சூர்யா ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.