AD

நயன்தாராவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான். சாதாரண நடிகையாக தான் இவரது திரை வாழ்க்கை தமிழ் சினிமாவில் தொடங்கியது. ஆனால், அவரது கடின உழைப்பால் பெரும் உயரத்தை எட்டியுள்ளார் இவர். தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார்.

இவரின் நடிப்பு திறமை அனைவரையும் ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். படத்தில் ஒரு பங்காக நடித்து வந்த இவருக்கு தற்போதெல்லாம் படமே இவருக்காக இயக்க தொடங்கிவிட்டார்கள். மேலும் தற்போது தளபதி 63-யில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, ஆனால் இவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் வேறு ஒரு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களில் நயன்தாரா ஸ்டைலாக இருக்கிறார்.