AD

நீண்ட நாட்களின் பின் சூர்யா ரசிகர்களிற்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி




தமிழ் சினிமாவில் தற்பொழுது ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. இப் படத்தில்  சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் நடித்து
உள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப் படத்திற்கு  யுவன்சங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். இது அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகின்றது.


இப் படத்தின் டீஸர் இன்னும் 6 நாட்களில் வெளியாகவுள்ளதால் சூர்யா ரசிகர்கள், பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் . தற்போது சூர்யா ரசிகர்களுக்கு வெளியாகியிருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்,  NGK திரைப்படத்தின் டப்பிங் பணிகள் களைகட்டியுள்ளது. மற்றும்  டீஸர் டப்பிங் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டாராம்
நடிகர் சூர்யா. நீண்ட நாட்களாக இந்த படத்தின் தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஏக்கத்தில் இருந்த சூர்யா-செல்வா ரசிகர்களுக்கு இச்செய்தி  மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.