AD

ஐராவில் பவானியாகவே மாறிய நயன்தாரா!!

நடிகை நயன்தாரா தான் ஏற்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் தனித்துவமாக செய்வதில் வல்லவர் மிக்கவர்.  தற்போது கதாநாயகிகளை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு படங்கள் அதிகம் வருவதற்கும் அவர்தான்  காரணமாக திகழ்கிறார்.

இந்த படம் குறித்தும் நயன்தாரா குறித்தும் இயக்குநர் சர்ஜுன் தெரிவித்ததாவது, இது நயன்தாராவின் 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்" ஏன் என்றால் நயன்தாரா 'பவானியாகவே" வாழ்ந்து இருக்கிறார் என்றார் இயக்குநர் சர்ஜுன்.