AD

டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினியின் புதிய படத்தின் டீசர்!!


டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி தற்போது த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள ஒரு படத்தில்  நடித்துள்ளார். அந்த படத்தின் பெயர் டூப்ளிகேட். இப்படத்தின் டீசர் தற்பொழுது  வெளியாகியுள்ளது.  விறுவிறுப்பான இந்த டீசரில் காருக்குள் இருக்கும் கதாநாயகியை அமானுஷ்ய சக்தி ஒன்று பயம் காட்டுவது போன்று காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தை இயக்குநர்கள் சசிக்குமார், சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த சுரேஷ் குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. அந்த டீசரில் ஒரு பெண், ஒரு கார் என ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை மிருணாளினி தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் "சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.