AD

நடிகை ஓவியாவின் 90ml திரைப்படத்தின் டிரைலர் வேற லெவல்!!

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90ml திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ஓவியா ரசிகர்ககளிடம் நல்ல  வரவேற்பை பெற்று வருகிறது. முதல் காட்சியிலேயே "நான் பிக்பாஸையே பார்த்தவடா" என்ற ஓவியாவின் வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டிரைலரில் லிப் கிஸ், பெட்ரூம் காட்சிகள், சரக்கு, சிகரெட் போன்ற தூக்கலான  காட்சிகள் கொண்டுள்ளது.

"மேல எல்லாம் ஓகே",  "கீழ இறங்கி வேலை செய்ய மாட்டாங்களா"  போன்ற பச்சையான இரட்டை அர்த்த வசனங்கள் இந்த டிரைலரில் இருப்பதால்தான் 18 வயது முதல் 60 வரை உள்ளவர்கள் மட்டுமே பார்க்கவும் என்ற டைட்டில் டிரைலரின் ஆரம்பத்திலேயே வருகிறது.

நடிகர்  சிம்புவின் இந்த படத்தில் இசை அமைத்து இருப்பதுடன் ஒரு முக்கிய  தோற்றத்திலும் தோன்றி நடித்துள்ளார்.  வழக்கமான பஞ்ச் டயலாக்கும் குறைவில்லையாம். மொத்தத்தில் இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.