AD

ஜப்பான் ரசிகர்களையும் மகிழ்விக்க போகும் சூப்பர் ஸ்டார்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு  வெளியான "பேட்ட" திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, நடிகை சிம்ரன், நடிகை த்ரிஷா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்தின் பழைய துள்ளலான நடிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கென்றே  உலகம் முழுவதும்  ரசிகர்கள் உள்ளார்கள். இதனால் சூப்பர் ஸ்டாரின் "பேட்ட" திரைப்படம் ஜப்பான் நாட்டில் நாளை ரிலீசாகவுள்ளது. பொங்கலுக்கு பேட்ட திரைப்படம் ரிலீசான போது ஜப்பானில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகர்கள் சென்னைக்கு வந்து திரைப்படம் பார்த்து "பேட்ட" யை  கொண்டாடினார். அதே போல்  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’ திரைப்படம் ‘டான்ஸிங் மகாராஜ்’ என்ற தலைப்பில் ஜப்பானில் வெளியானது குறிப்பிடத்தக்கது.