AD

நடிகை எமிஜாக்சனை கவர்ந்த இடம்!!

நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். ஷங்கர் இயக்கிய இரண்டு படங்களில் ஒன்றான "ஐ" என்ற படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்திருத்தார். இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.  எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப்போவதாக  புத்தாண்டு தினத்தன்று தெறிவித்தார்.

எமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள்.
எமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு எமியை மிகவும் கவர்ந்ததாக  கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது