AD

தளபதி இப்படிப்பட்டவரா? கதிர் கூறும் உண்மை!



தற்போது தளபதி விஜய் பிசியாக அவரது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இசையமைப்பாளராக எ. ஆர். ரஹ்மான், இயக்குனராக அட்லீ, நகைச்சுவை நடிகராக யோகிபாபு, விவேக், கதாநாயகியாக நயன்தாராவும் நடித்துய வருகிறார்கள்.

மேலும், பரியேறும் பெரும்பாள் புகழ் கதிரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கதிர் மற்றும் தளபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகிறதாம். இவர் விஜய்யுடன் நடிக்கும் போது கொஞ்சம் கூட அவர் பெரிய நடிகர் என்று காட்டிக்கொள்வது இல்லையாம்.

அது மட்டுமின்றி எந்த ஒரு காட்சி நடித்தாலும், அது அவருக்கு பிடித்திருந்தால், உடனே மனம் விட்டு பாராட்டுகின்றார் என்று கதிர் கூறியுள்ளார். இதை கேட்ட தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்.