AD

அனுஷ்கா சர்மாவை வியக்க வைத்த பெண்!!


கடந்த வாரம் இந்தியாவில் அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் திடீரென டிரெண்ட் ஆகத் தொடங்கினார். காரணம் என்ன தெரியுமா? இன்ஸடகிராமில் இவர் ஒரு போட்டோவை பதிவிட நம் இந்தியர்கள் பலரும் "நீங்கள் பார்க்க அப்படியே அனுஷ்கா ஷர்மா மாதிரி இருக்கிறீங்க என்று கமெண்ட்களை கொட்டியுள்ளனர். விராட் கோலியையும் டேக் செய்துள்ளனர். இது அப்படியே மற்ற சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. மீம்ஸ், வீடியோ என இது தொடர்பான விஷயங்கள் அனைத்தும் லைக்ஸை அள்ளின.



இதை கவனித்த ஜூலியா மைக்கேல்ஸ் ட்விட்டரில் தற்போது ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் நாம் உண்மையிலேயே "இரட்டையர்கள்தான்" போல என கலாய்யுத்துள்ளார். இதற்கு "அனுஷ்கா ஷர்மா" ஆமா உங்களையும் மீதி இருக்கிற அந்த 5 பேரையும் இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தேன் என ட்வீட் செய்துள்ளார்.