நடிகர் சரத்பாபு மீது போலீஸில் புகார் அளித்த முன்னாள் நடிகை!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா படங்களில் ஹீரோ, குணச்சித்திர
வேடங்களில் நடித்திருப்பவர் நடிகர் சரத்பாபு. தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினிக்கு நண்பராக இருந்து பின்னர் எதிரியாக மாறும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் நடிகர் சரத்பாபு, 1980களில் தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த ரமா பிரபா என்பவருடன் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நடிகை ரமா பிரபா, சென்னையில் உள்ள எனது சொத்துக்ளை சரத்பாபு ஏமாற்றி பறித்துவிட்டார்&என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
நான் என் விவசாய நிலங்களை விற்று அவருக்கு உமாபதி தெருவில் ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். அவரின் மற்ற வீடுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். நான் அவருக்கு வாங்கி கொடுத்த என்னுடைய வீட்டை தான் திரும்ப எடுத்து கொண்டேன் என நடிகர் சரத்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
Post a Comment